Thursday 15 September 2011

Gmail

Gmailடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3.14 உயர்த்தப்படுகிறது.

இன்றிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. கடந்த 4 மாதங்களில் இது இரண்டாவது விலை உயர்வாகும்.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருப்பதாலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாலும் இந்த விலை உயர்வை அமல்படுத்த வேண்டிய நிலை உருவானதாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இப்போது பெட்ரோல் விற்கப்படும் விலையால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.2.61 இழப்பு ஏற்படுவதாகவும், தினந்தோறும் ரூ.15 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பெட்ரோலுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் அரசுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டது. இதனால் விலையை நிறுவனங்கள் நினைத்தபோதெல்லாம் உயர்த்தி வருகின்றன.